Mégsem tetszik a termék? Semmi gond! A termékeket akár 30 napig visszaküldheti
Ajándékutalvánnyal nem hibázhat. A megajándékozott az ajándékutalványért bármit választhat kínálatunkból.
Akár 30 napos visszaküldési lehetőség
நரியும் திராட்சையும், ஓநாயும் ஆட்டுக்குட்டி யும் சிங்கமும் சுண்டெலியும் என்ற கதைகளெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தக் கதைகளைக் கூறியவர் யார் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர்தாம் ஈசாப்.
ஈசாப் கூறிய கதைகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. அவரது கதைகளில் மிருகங்கள், பட்சிகள் யாவும் பேசுகின்றன. அவற்றின் பேச்சுக்கள் நமக்குப் புத்தி புகட்டுகின்றன.
ஈசாப் கதைகளில் உள்ள பல அற்புதக் கருத்துக்களை அழகிய பாடல்களாக்கி "பாலர் மலர்" "பூஞ்சோலை" ஆகிய இரு பத்திரிகைகளின் வாயிலாகத் தந்தார் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள்.
அவர் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்து முன்பு இரு தொகுதிகளாக வெளியிட்டோம். இப்போது அந்த இரு தொகுதிகளிலிருந்த பாடல்கள் அனைத்தையும் ஒரே தொகுதியாகத் தந்திருக்கிறோம்.
தெருவில் குழந்தைகள் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தார் ஒரு பெரியவர். உடனே குழந்தைகள் கூட்டத்தில் புகுந்தார்; அவர்களுடன் சேர்த்து விளையாட ஆரம்பித்து விட்டார்.
அச்சமயத்தில் அவ்வழியாக வந்தான், ஒருவன். ஒரு பெரியவர் குழந்தைகளுடன் சேர்ந்து குதித்து விளையாடும் காட்சியை அவன் கண்டான். உடனே, அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"ஓய் பெரியவரே, உமக்கு என்ன வயதாகிறது! நீர் இப்படிக் குழந்தைகளுடன் சேர்ந்துகொண்டு கும்மாளம் போடுகிறீரே! தராதரமே உமக்குத் தெரியவில்லையே" என்று கேட்டான், அவன்.
Szia! Libroamiko vagyok, a könyvtanácsadód.
Miben segíthetek?